மயிலாடுதுறை: குட்கா விற்பனை செய்தவா் கைது

52பார்த்தது
மயிலாடுதுறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலை சின்ன மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கொளஞ்சி (40). இவர் தனது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்ததாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்து 30 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, கொளஞ்சியை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி