மயிலாடுதுறை புதிய மாவட்டமாக கடந்த 2020 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதனிடையே மயிலாடுதுறை அடுத்த மன்னம்பந்தல் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ரூபாய் 15 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் அடிக்கல் நாட்டில் பணிகளை துவக்கி வைத்தனர்.