மயிலாடுதுறை அடுத்த தர்மபுரத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் மடாதிபதியின் வீடியோ மற்றும் ஆடியோ உள்ளதாக பணம் கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பாஜக மாவட்ட தலைவர் அகோரத்திற்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து மயிலாடுதுறைக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் அகோரத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர்.