மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

78பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல கஞ்சா நகரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இந்திராணி (65).

விவசாயக் கூலி தொழிலாளியான இவர் தனது வீட்டில் உள்ள மின்சார பைப்பை தொட்டதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை விட்டு மயிலாடுதுறை அரசினர் பெரியார் தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி