மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் நிலவும் மருத்துவம் பற்றாக்குறையை போக்க கோரி அனைத்து துறை மருத்துவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் கடும் மருத்துவர் பற்றாக்குறை நிலவுவதாகவும், ஆகையால் உடனடியாக கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தி அனைத்து துறை மருத்துவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களை மாநகராட்சி ஊழியர்கள் தரக்குறைவாக பேசியதை கண்டித்து தமிழகம் தழுவிய அளவில் இன்று மருத்துவர்கள் ஒரு மணி நேரம் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக மருத்துவமனையில் கூடுதல் மகப்பேறு மருத்துவர் நியமிக்க வேண்டும் என இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட அனைத்து துறை மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர் பிரபா தலைமையில் கருப்பு பேட்ச் அணிந்து ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.