மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவிலில் தையல்நாயகி அம்பாள் சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
செவ்வாய் பரிகார ஸ்தலமான இந்த கோவிலில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திரளான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர்.
ஏராளமான பக்தர்கள் சித்தாாமிர்த தீர்த்த குளம் விநாயகர் சன்னதியில் இருந்து பஞ்ச தீப வழிபாடு செய்து கிரிவலம் தொடங்கி ஓம் நமச்சிவாய எனும் மந்திரம் சொல்லியவாறு நான்கு வீதிகளை வலம் வந்து வழிபட்டனர்.