மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யப்போறி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிட கழகத்தின் டெல்டா மண்டல செயலாளர் பெரியார் செல்வம் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்யப் கோரியும், கல்வியை ஒன்றிய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.