ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

76பார்த்தது
குத்தாலம் ரயில் நிலையம் முன்பாக மயிலாடுதுறை மாவட்ட மக்களை புறக்கணிக்கும் இரயில்வே நிர்வாகத்தை கண்டித்து
குத்தாலம் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் குத்தாலம் வர்த்தகர்கள் சங்கம் குத்தாலம் லயன்ஸ் சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து மாபெரும் கோரிக்கையை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குத்தாலம் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் ராஜகுமார் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குத்தாலம் ரயில் நிலையத்தில் காலையில் செல்லும் திருச்சி இரயிலை 12 பெட்டிகளுடன் இயக்க வேண்டும், மெமோ இரயில் பெட்டிகள் வேண்டாம்,
சேலம் ரயில் வண்டியில் கூடுதல் பெட்டிகளை இணைத்திட வேண்டும்,
சென்னைக்கு பகல் நேரம் முன்பதிவுள்ள ரயில் வண்டியை இயக்க வேண்டும், குத்தாலத்தில் சோழன் அதி விரைவு ரயில் நின்று செல்ல வேண்டும்,
மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சளியை அமல்படுத்த வேண்டும், குத்தால ரயில் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கழிவுரையை திறந்திட வேண்டும், தஞ்சை விழுப்புரம் இரட்டை வழிப்பாதை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி