மயிலாடுதுறை அடி அருகே கோழி குத்தி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வானமுட்டி பெருமாள் கோவில் எனப்படும் சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். முன்னதாக ஆளுநருக்கு ஆலய நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.