மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே பட்டவர்த்தி கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பா சாகுபடிக்குப் பிறகு பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களில் பருத்தி பூக்கும் பருவத்தில் இருந்தது.
தற்போது சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பருத்திச் செடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.