தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

53பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2023 - 2024 கல்வி ஆண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.