மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் உள்ள குற்றவாளிகளை பிடித்து சிறப்பாக பணிபுரிந்த, தனிப்படை காவலர்களுக்கு நேற்று தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்த பாராட்டினார். தொடர்ந்து காவலர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கும் மென்மேலும் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வில் ஏராளமான காவலர்கள் பங்கேற்றனர். மேலும் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.