மயிலாடுதுறையில் பெரிய தைக்கால் தெரு, ராஜேஸ்வரி நகர் மற்றும் திருவள்ளுவர் நகர் ஆகியவற்றின் இடையே அமைந்துள்ள தோப்பு சின்ன மாரியம்மன் கோவில் 22 ஆம் ஆண்டு தீமிதி உற்சவ திருவிழாவில் தொடக்க நிகழ்வான பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பதினெட்டாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் காந்தி மற்றும் பெரு முக்கியஸ்தர்கள் பங்கேற்று பந்தக்கால் நடும் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது.
வருகிற ஏப்ரல் 25ஆம் தேதி மாலை தீமிதி உற்சவ திருவிழா நடைபெற உள்ளது.