மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மங்கைமடம் பாலாஜி நகரை சேர்ந்த சர்க்கரை ஆலை பொறியாளர் செல்வேந்திரன் (60). இவரது வீட்டில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 150 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளை பொருட்கள் மற்றும் ரூபாய் 80, 000 ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகைகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.