போதை ஆசாமியின் அட்ராசிட்டி; வைரல் வீடியோ

1052பார்த்தது
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் குடிபோதையில் இளைஞர் ஒருவர் நடனமாடி நடுரோட்டில் வாகன ஊட்டிகளை அச்சுறுத்தினார். மேலும் 15 நிமிடங்களுக்கு மேலாக அவர் சாலையில் செல்லும் வாகனங்கள் மீது காலை தூக்கி உதைத்தும், தாக்கியும் அடாவடியில் ஈடுபட்டார். செய்வதறியாது திகைத்த பொதுமக்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர். பேருந்து ஓட்டுநரும் செய்வதறியாது பேருந்தை நிறுத்தி இருந்தார். போதை தலைக்கேறி நடனமாடியபடி பேருந்தை எட்டி உதைத்த போது கால் பிசகி எலும்பு முறிவு ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் அங்கிருந்து தவழ்ந்தவாறு சென்றார். அங்கிருந்தவர்கள் எடுத்த இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி