தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

582பார்த்தது
மயிலாடுதுறை அடுத்த தர்மபுரத்தில் உள்ள தருமபுரம் ஆதீன மடாதிபதியின் பட்டினப்பிரவேச விழாவை தடை செய்ய வேண்டும் என கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம், மக்கள் அதிகாரம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், தமிழர் உரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மனிதனே மனிதனை சுமக்கும் தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசத்தை தடை செய் தடை செய் என ஆதீனத்திற்கு எதிராக ஏராளமானோர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி