மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட ராஜேஸ்வரி நகர் பகுதியில் திறந்த நிலையில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பாதாள சாக்கடை மூடியானது திறந்து காணப்படுகிறது. இவ்வழியாக வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வரும் நிலையில் இரவு நேரங்களில் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன்பாக நகராட்சி நிர்வாகத்தினர் உடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.