மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி ஆணையர் மஞ்சுளா உத்தரவின் படி, நகராட்சி பணியாளர்கள், பரப்புரையாளர்கள் புதிய பேருந்து நிலையம் உள்ள இடம் முக்கிய இடங்களில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழி பொருட்கள் குறித்த சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது டீ கப்புகள், நெகிழி பைகள் உள்ளிட்ட 20 கிலோ அளவிலான நெகிழிப் பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.