நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராமபுரம் கவுண்டர்புரத்தில் பழமை வாய்ந்த வெள்ளையம்மாள், ஸ்ரீ பொம்மி அம்மாள் சமேத கிடங்கு ஸ்ரீ மதுரை வீரன் கோயில் அமைந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு ரூ. 1. 50 கோடி மதிப்பீட்டில் கருங்கற்களால் பிரமாண்டமாக கட்டப்பட்டது. இந்நிலையில் கும்பாபிஷேக விழா
கடந்த ஜூன். 6 ஆம் தேதி முதல் கால யாக பூஜை உடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து நான்கு கால யாகபூஜைகள் மற்றும் மஹா பூர்ணாஹூதி நடைபெற்றது. மேளதாளம் மற்றும் மல்லாரி ராகத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதள் மந்திரங்கள் முழங்க கிடங்கு மதுரை வீரன், ராஜகோபுரம் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து
வெள்ளையம்மாள், ஸ்ரீ பொம்மி அம்மாள் சமேத கிடங்கு ஸ்ரீ மதுரை வீரனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்