தியாகராஜ சுவாமியின்   பிருங்க நடனம்

85பார்த்தது
சப்தவிடங்க ஸ்தலங்களில் ஒன்றான திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா வசந்த உற்சவம்  கோலாகலம்: சிவ வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ தியாகராஜ சுவாமியின்   பிருங்க நடனத்தை கண்டு  பக்தர்கள் மனமுருகி பிரார்த்தனை.


நாகை மாவட்டம் திருக்குவளையில்  தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான  ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சப்தவிடங்க ஸ்தலங்களில் ஒன்றான  இக்கோயிலில் தருமபுர ஆதீனத்தின் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி அருளாசியுடன் சித்திரை பெருவிழா
கடந்த மே. 23 ஆம் தேதி  கொடி யேற்றத்துடன் யேற்றத்துடன் துவங்கி வெகு விமர்சியாக நடை பெற்று வருகிறது. தினமும் பல்வேறு வித வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான வசந்த உற்சவம் இரவு நடைபெற்றது. சிவ வாத்தியங்கள் முழங்க சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீதியாகராஜ சுவாமி  பிருங்க நடனமாடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து சிறப்பு மகா தீபாரதனைக்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான உபய ஏற்பாடுகளை பி. டி. எம் செந்தில் குடும் பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்வில் கோயில் நிர்வாகிகள், இளைஞர்கள், பக்தர்கள் பெரியோர்கள் மற்றும் இறைப்பணி பணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி