திருமருகல் ஒன்றியக் குழு கடைசிக் கூட்டம்

62பார்த்தது
திருமருகல் ஒன்றியக் குழு கடைசிக் கூட்டம்
திருமருகல் ஒன்றியக் குழுவின் கடைசிக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவர் ஆர். ராதாகிருட்டிணன் தலைமை வகித்தார். ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், ஐந்தாண்டு காலம் மக்கள் பணியாற்றியதை நினைவுகூர்ந்து உறுப்பினர்கள் பேசினர். 

அப்போது, தங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். ஒன்றியக் குழுத் தலைவருக்கு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மற்றும் அலுவலக பணியாளர்கள் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினர். கூட்டத்தில் துணைத் தலைவர் திருமேனி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி