50 இலட்சம் மதிப்பிலான வெள்ளி மற்றும் தங்கம் திருட்டு.

78பார்த்தது
மணக்குடி ஊராட்சியில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 50 இலட்சம் மதிப்பிலான வெள்ளி மற்றும் தங்கம் திருட்டு.

நாகை மாவட்டம் திருக்குவளை தாலுக்கா மணக்குடி ஊராட்சி கடைத்தெருவில் 10 ஆண்டுகளுக்கு மேல் நகை மற்றும் அடகுக்கடையை அதே ஊரைச் சேர்ந்த கணேசன் என்பவர் நடத்தி வரும் நிலையில் நேற்று இரவு கடையை வழக்கம் போல் பூட்டி விட்டு காலையில் 10 மணிக்கு நகைக் கடையை திறக்க வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடையில் பூட்டியிருந்த 6 பூட்டுகளும் உடைக்கப் பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் காவல் துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் காவல்துறை நடத்திய ஆய்வில் சுமார் 45 இலட்சம் மதிப்பிலான 50 கிலோ வெள்ளிப் பொருட்களும், 50 கிராம் தங்க நகைகளும் காணமல் போனது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து தலைஞாயிறு காவல் துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் , தடயவியல் துறை நிபுணர்கள் விசாரணை செய்து வருகின்றனர். பிரதான சாலை அருகே நடைபெற்ற திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி