நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நள்ளிரவு முதல் அதிக அளவில் கரை திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக இங்குள்ள மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை என்பதால் மீன்கள் வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மீன் பிரியர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. மீன் விலை சற்று அதிகரித்து காணப்பட்டாலும் விலையை பொருட்படுத்தாமல் வியாபாரிகளும், பொது மக்களும் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்று வருகின்றனர்.
நாகை மீன்பிடி துறைமுகத்தில் ஒரு கிலோ வஞ்சரம் ரூ. 1000
பாறை ரூ 350-400
கடல் விறா- ரூ 400-420
சூறை மீன் ரூ 80
சீலா-350-400
வௌவால்-1200-1300
அயில- 200
இறால் -450-550
புள்ளி நண்டு-500-550
சாதாரண நண்டு -250-300க்கும் விற்பனை செய்யப்படுகிறது
மீன்களின் விலை அதிகமாக இருந்தாலும், ஃபிரெஷானா மீன் வாங்குவதற்காகவே மீன்பிடி துறைமுகத்திற்கு இரவே வந்து காத்திருந்து தற்பொழுது வாங்கி செல்வதாகவும், அதிகாலை முதல் வியாபாரிகள் கூட்டம் மற்றும் மக்களின் கூட்டமும் அதிகமாக உள்ளதென மீன் பிரியர்கள் சொல்கின்றனர்.