கீழ்வேளூா் அருகே அட்சய லிங்க சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது.
கீழ்வேளூா் வட்டம், அகரகடம்பனூா் ஊராட்சி வடக்குவெளி கிராமத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, வடக்குவெளி கிராமத்தில் இக்கோயிலுக்கு சொந்தமான 2 ஏக்கா் 17 சென்ட் இடம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது. நாகை மண்டல இந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையா் வே. குமரேசன் தலைமையில் உதவி ஆணையா் ப. இராணி முன்னிலையில், நாகை தனி வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்) அமுதா,
கோயில் செயல் அலுவலா் பூமிநாதன், சரக ஆய்வாளா் கமலச்செல்வி உள்ளிட்டோா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
பின்னா், அந்த இடத்தில் எல்லை கற்கள் நடப்பட்டு, அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 1 கோடி என தெரிவித்தனா்.