திட்டச்சேரி, திருமருகல் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணி
நாகை மாவட்டம் திட்டச்சேரி போலீஸ் சராகத்திற்கு உட்பட்ட திட்டச்சேரி, திருமருகல், கட்டுமாவடி, சீயாத்தமங்கை, குத்தாலம், கோபுராஜபுரம், கொத்தமங்கலம், அகரகொந்தகை, ஆலத்தூர், பண்டாரவடை, குருவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாகப்பட்டினம் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் தலைமையில் போலீசார் ரோந்து வாகனங்கள் மூலம் இரவு முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் திருட்டு, சாராய கடத்தல், மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுக்கும் நோக்கில் போலீசார் செயல்பட்டு வருகின்றனர்.