வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் காத்திருப்பு போராட்டம்.

74பார்த்தது
பதவி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பாரத மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர் துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்.கிராம உள்ளாட்சி அமைப்பில் மக்களின் அடிப்படை அத்தியாவசிய பணிகளில் நீண்ட நெடுங்காலமாக பணிபுரியும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டம் 1948 பிரிவு 7ன் படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வலியுறுத்தி மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் தொழிலாளர் துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுமதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். , இதில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பாரத மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும், கொரோனா காலத்தில் முன் களப்பணியாளர்களாக பணியாற்றிய சுகாதார ஊக்குவிக்காராளர்கள், மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், பள்ளி சுகாதார பணியாளர்களுக்கு அரசு அறிவித்த கொரோனா ஊக்கத்தொகை 15, 000 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி