குடிசை வீடு எரிந்து நாசம்,

75பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள இருக்கை கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் வசந்தி என்பவர் வசித்து வருகிறார்கள் இவர்களுடைய குடிசை வீட்டிற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பதாக தான் புதிய கூரைகள் மாற்றப்பட்டு மறுபடியும் வீடு செப்பனிடப்பட்டது.
இந்நிலையில் இன்று திடீரென அந்த குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர், இருந்தும் தீ மல மல வென பரவியதால் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சேதம் ஆனது, இந்நிலையில் தீ விபத்து பகுதிக்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்

இதன் காரணமாக வீட்டில் இருந்த எட்டு பவுன் நகை மற்றும் கட்டில் பீரோ தொலைக்காட்சி உட்பட ஏராளமான பொருட்கள் தீயில் கருகின இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது, மேலும் அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகளின் சீருடைகள் மற்றும் புத்தகங்கள் சான்றிதழ்களும் தீயில் எரிந்து நாசமானது மேலும் அவர்கள் குடியிருக்கும் பகுதி கோயிலுக்கு சொந்தமான நிலம் என்றும் இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து தங்களுக்கு ஒரு நல்ல தொகுப்பு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி