கங்களாஞ்சேரியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு ‘சீல்’

76பார்த்தது
கங்களாஞ்சேரியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு ‘சீல்’
திருமருகல் ஒன்றிய பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் உத்தரவின்படி, திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேக்ரவிராஜ், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஆண்டனி பிரபு ஆகியோர் கங்களாஞ்சேரி மெயின்ரோடு பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது கங்களாஞ்சேரி பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 38) மற்றும் தங்கராசு (51) ஆகிய இருவரின் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளுக்கு 'சீல்' வைத்து கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி