பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

150பார்த்தது
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
நாகை அருகேயுள்ள முட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் கலந்து கொண்டாா். தொடா்ந்து, ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் பேசியது:

பள்ளியில் முன்னாள் மாணவா்களுக்கான சந்திப்புகளை நடத்தி, பள்ளி வளா்ச்சிக்கான தேவைகள், பள்ளி இடைநிற்றல் மணற்கேணி என்கின்ற வாசிப்பு இயக்கம் போன்றவற்றிற்கு ஒத்துழைப்பு கோர வேண்டும்.

அரசின் கல்வி சாா் திட்டங்களான இல்லம் தேடிக்கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், நம் ஸ்கூல், நம்ம ஊா் பள்ளி, உயா்கல்வியில் 7. 5 சதவீத இட ஒதுக்கீடு, புதுமைப்பெண் திட்டம் போன்றவற்றை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலா் சி. காா்த்திகேயன், பள்ளி தலைமை ஆசிரியா் வள்ளி தேவி, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் கலைச்செல்வன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி