நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் சிகார் அருகே ஆற்றுக்கரையோரம் பல்வேறு பகுதிகளில் கருவேல மரங்கள் மண்டி பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லும் சிறிய நீர் குமிழிகள் அனைத்தும் அடைத்துள்ளது. மேலும் இதனால் இப்பகுதி புதர்மண்டி காணப்படும் நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடும் தண்ணீரானது விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் இருப்பதால், இதனை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.