கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைக்க கோரிக்கை
By Kamali 66பார்த்ததுநாகப்பட்டினம் மாவட்டத்தில் அண்ணா சிலை அருகில் கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் மேற்கூரை சிதிலமடைந்து காணப்படுகிறது.
எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயம் உள்ளதால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் வந்த செல்கின்றனர்.
உடனடியாக விரைந்து துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.