நாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் செல்லம் வாகன ஓட்டிகளின் பயணத்தை எளிமையாகும் வகையில் நாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூர் வரை புறவழி சாலை அமைக்கும் பணிகள் ஏறக்குறைய 75 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டது.
இந்நிலையில் நாகப்பட்டினம் செல்லூர் - பொரவாச்சேரி வரை உள்ள பணிகள் மட்டும் முழுமை பெறாமல் உள்ளது.
இதனால் அதன் வழியாக கனரக வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சிரமம் உள்ளதால் அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.