நாகப்பட்டினம் மாவட்டம் திருமகள் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருக்கண்ணங்குடி பகுதியில் கால்நடை வளர்ப்போர் அதிக அளவில் உள்ளனர்.
ஆனால் அவர்கள் வீடுகளில் முறையாக கால்நடைகளை கட்டி வளர்க்காத காரணத்தால் அவைகள் சாலைகளில் சுற்றி திரிகின்றன.
இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த கால்நடைகளால் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே இந்த கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.