கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

61பார்த்தது
கீழ்வேளூர் தாலுக்கா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென காற்றுடன் மழை பெய்தது. கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு கூட அச்சமடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை முதல் வெயில் அடித்து வந்த நிலையில், மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து காற்றுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி