மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. தினசரி காலை 6. 20 மணிக்கு சேலம் செல்லக்கூடிய ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்; ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான ரயில் பயணிகள் சங்கத்தினர் பங்கேற்றனர்.