திருமருகல் அருகே திறப்பு விழா காண காத்துக் கிடக்கும் ரேஷன் கடையை திறந்து வைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி பகுதியில் சுமார் 1100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி புறாக்கிராமம் ராஜா தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2018-19 ஆம் நிதியாண்டில் ரூ. 11 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது.
கட்டுமான பணிகள் முழுவதும் முடிவடைந்து ஆறு மாதங்கள் கடந்தும் இன்றுவரை கட்டிடம் திறக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வெகுதொலைவில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதனால் வயதான முதியவர்கள், பெண்கள் அரிசி உள்ளிட்ட பொருட்களை தூக்கிவர முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் தற்காலிகமாக ரேஷன் கடை செயல்படும் இடத்தில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாமலும், நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று பொருட்கள் வாங்கும்போது திட்டச்சேரி-திருமருகல் மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.