நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு அஞ்சலக சிறுசேமிப்பு புத்தகம், மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, மூன்று சக்கர வாகனம், மீனவர்களுக்கு மீன்பிடி உள்ளிட்ட நிவாரண தொகைகள் என ஆறு கோடியே 45 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.