நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் பாதுகாப்பு மற்றும் பெண்ணுரிமை சிறப்பு மாநாடுகளின் தீர்மான விளக்க பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர்
ஸ்டாலின் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் லெனின் முன்னிலை வகித்தார். கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம். எல். ஏ வுமான மாரிமுத்து கலந்துகொண்டு பிரச்சாரம் குறித்த பேசினார். இதில் தமிழகத்தில் நிலவும் பட்டியல் வகுப்பினர் கோவில்களில் அனுமதி மறுப்பு, இடுகாட்டில் சாதி பாகுபாடு, இரட்டை குவளை முறை உள்ளிட்ட சாதிய தீண்டாமை கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், சமூகத்தில் நிலவும் பாலின பாகுபாட்டை ஒழித்து கட்ட பெண்களுக்கு எதிராக பிற்போக்கு ஆணாதிக்க சிந்தனைகளுக்கு முடிவு கட்ட உரிய சட்ட திட்டங்களை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்பன குறித்து பேசினர். இதில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பாலு, பிரபாகரன், பாரதி, காரல் மார்க்ஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர். அதேபோல் திருப்புகலூர் கடை தெருவிலும் பிரச்சாரம் நடைபெற்றது.