நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியக்குழுவின் கடைசி கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் தலைமையில் நடந்தது. ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஐந்தாண்டு காலம் மக்கள் பணியாற்றியதை நினைவுகூர்ந்து உறுப்பினர்கள் பேசினர். அப்போது தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர். ஒன்றியக்குழு தலைவருக்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள், சத்துணவு ஊழியர் சங்கத்தினர், அலுவலக பணியாளர்கள் சால்வை அணிவித்தும், நினைவுப்பரிசினை வழங்கியும் கண்ணீருடன் விடைபெற்றனர். இறுதியில் ஒன்றியக்குழு தலைவர், உறுப்பினர்கள், அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கூட்டத்தில் துணைத்தலைவர் திருமேனி மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர் நன்றி கூறினார்.