நாகை அருகே கோவில்பத்து
ஶ்ரீ கண்ணாம்பாள் மாரியம்மன் கோயில் 4ஆம் ஆண்டு வைகாசி திருவிழாவை முன்னிட்டு சிலம்பாட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்த, கொடியாலத்தூர் ஊராட்சி கோவில்பத்து வலிவலத்தில் ஶ்ரீ கண்ணாம்பாள் மாரியம்மன், ஶ்ரீ கழனியப்ப ஐயனார் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயில்
4ஆம் ஆண்டு வைகாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பால்குட ஊர்வலம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது வலிவலம் அருள்மிகு இருதய கமலநாத சுவாமி திருக்கோயில் குளக்கரையில் இருந்து துவங்கிய பால் குட ஊர்வலத்தில் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி இளநீர் காவடிகளை சுமந்தபடி ஊர்வலமாக
முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பால் கொண்ட அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. பால்குட ஊர்வலத்தில் சிறுவர்களால் அரங்கேற்றப்பட்ட சிலம்பாட்ட நிகழ்வினை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.