நெகிழி கழிவுகளை சேகரித்தல் பணிகள் தீவிரம்

70பார்த்தது
நெகிழி கழிவுகளை சேகரித்தல் பணிகள் தீவிரம்
திருப்புகலூர் ஊராட்சியில்
நெகிழி கழிவுகளை சேகரித்தல் பணிகள் தீவிரம்


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் ஊராட்சி பகுதிகளில் சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுப்புறச் சூழலை உருவாக்கும் பொருட்டு தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் நெகிழி கழிவுகளை சேகரித்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த பணியினை ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில்: - ஊராட்சி பகுதியில் நெகிழி சேகரித்தல் பணி நடைபெற்று வருகிறது. ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் அனைத்து நிலை அலுவலர்களும் கலந்து கொண்டு நெகிழிகளை சேகரித்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து ஊராட்சியில் ஒப்படைத்து கிலோ ஒன்றுக்கு ரூ. 10 பெற்றுக் கொள்ளலாம் எனவும் தொடர்ந்து பிரித்து வழங்குபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றார். இந்த ஆய்வின் போது தூய்மை பாரத இயக்க மண்டல தகவல் தொடர்பு மற்றும் கல்வி ஆலோசகர் தயாள்நிதி, வட்டார ஒருங்கிணைப்பாளர் இளங்கோ, ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி