தீச்சட்டியை கடலில் விட்டு மீனவர்கள் நேர்த்திக்கடன்

74பார்த்தது
நாகப்பட்டினம் அடுத்த அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் அமைந்துள்ள சப்த கன்னியம்மன் ஆலயத்தின் மாசிமகத் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 9ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கிய கன்னிக்கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று கடலில் தீச்சட்டி விடும் வினோத வழிபாடு நடைபெற்றது. அப்போது பம்பை மேளம் முழக்கத்திற்கு ஏற்றவாறு பெண் பக்தர்கள் சாமி வந்து ஆடினர். தொடர்ந்து ஒவ்வொரு பெண் பக்தர்களும் வரிசையில் நின்று பூசாரியின் சாட்டையடியை மெய்மறந்து ஏற்றுக்கொண்டனர். பின்னர் சப்த கன்னியம்மன் ஆலயத்தில் இருந்து பிரம்மாண்ட தீச்சட்டியை மீனவர்கள் கைகளில் ஏந்தியவாறு கடற்கரை பகுதிக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து பம்பைமேளம் முழங்க மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகில் வானவேடிக்கை முடங்க எடுத்துச் செல்லப்பட்ட பிரம்மாண்ட தீச்சட்டியை நடுக்கடலில் விட்டு மீனவர்கள் நேர்த்திகடன் நிறைவேற்றிக் கொண்டனர். அப்போது மீன்வளத்தையும், மீனவர்களையும் காக்க வேண்டி, மனமுருகி கடல்கன்னியை வேண்டிக் கொண்டனர். இதில் நாகை மயிலாடுதுறை காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி