நாகை மக்களவை தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை. செல்வராஜ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி அடுத்த செருதூர் திமுக சார்பில் இன்று காலை பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.