நாகை மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கிறிஸ்துமஸ் தாத்தாகளின் பேரணி வெகு விமர்சையாக நடைபெற்றது
வேளாங்கண்ணி விடியற் காலை விண்மீன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பேரணியில்
இதில் 700-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தும் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்தும் வாழ்த்து பாடல்களுக்கு ஆடியபடி மகிழ்ச்சியுடன் வேளாங்கண்ணி நகரில் ஊர்வலம் வந்தனர்.
பேரணியானது பஸ் நிலையம், கடைவீதி வழியாக வேளாங்கண்ணி மாதா பேராலய முகப்பில் நிறைவு பெற்றது.
இதில் பேராலய பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், பங்கு மக்கள் என 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்