திருமருகல் அருகே அரசு பள்ளியில் ஆண்டு விழா

84பார்த்தது
திருமருகல் அருகே அரசு பள்ளியில் ஆண்டு விழா
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி துறையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர் கார்த்திகா முன்னிலை வகித்தார். 

ஆண்டுவிழாவை வவ்வாலடி பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் துவங்கி வைத்தார். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் வேம்பு வரவேற்றார். விழாவில் தென்கரை பள்ளி ஆசிரியர் பாலசுப்ரமணியன், வவ்வாலடி ஆசிரியர் வடிவேலு, வடகரை ஆசிரியர் தமிழ்மணி ஆகியோர் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

இடைநிலை ஆசிரியர் முருகானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். இதில் ஆசிரியர்கள் செல்லப்பா, சத்யானந்தவதி, தமிழ்வாணி, சுஜிதா மற்றும் மாணவ-மாணவியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சத்துணவு அமைப்பாளர் பாரதியம்மாள் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி