நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுகா கத்தரிப்புலம் கிராமத்தில் அழகு புத்திர அய்யனார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அழகு புத்திர அய்யனாருக்கு தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு போட்டு அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டனர்.