டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், கர்நாடக அரசை கண்டித்தும் நாளை 11-ம் தேதி நடைபெறும் கடையடைப்பு மற்றும்
ஆர்ப்பாட்டம் தொடர்பாக அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் திருமருகல் வடக்கு ஒன்றிய
திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு
திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கடைகளையும் அடைத்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், ஒன்றியத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி,
காங்கிரஸ், திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.