நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் அதிமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர் அமைத்தல் மற்றும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைக்கும் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் கழக அமைப்பு செயலாளர் ஆசைமணி தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருட்டிணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாகை மாவட்ட செயலாளர் ஓ. எஸ். மணியன் எம். எல். ஏ கலந்துக்கொண்டு பேசினார். முன்னதாக நகர செயலாளர் அப்துல் பாசித் வரவேற்றார். இதில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளரை அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்வது, கட்சியில் அதிக உறுப்பினர்களை இணைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் நாகை நகர செயலாளர் தங்க கதிரவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதேபோல் திருமருகல் தனியார் மண்டபத்தில் திருமருகல் ஊராட்சிக்கான வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.