பூட்டு போடும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

476பார்த்தது
பூட்டு போடும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
நாகை மாவட்டம் திருப்பூண்டியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற இருந்த மருத்துவமனைக்கு பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது இந்நிலையில் வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாச்சியர் ரமேஷ் தலைமையில் அமைதி பேச்சி வார்த்தை நடைபெற்றது இந்த அமைதி பேச்சி வார்த்தையில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் O. S. இப்ராஹிம் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பேச்சு வார்த்தையில் அரசு தரப்பிற்கு உடனடியாக அழுத்தம் கொடுத்து விரைவில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தருவதாக அளித்த உறுதிமொழியை ஏற்று நடைபெற இருந்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி