கீழ்வேளூா் ஒன்றியத்தில், தூய்மை பணிகளுக்காக புதிதாக 26 மின்கலன் வாகனங்கள் பெறப்பட்டுள்ளன.
கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பாரத இயக்கம் 2023-2024 திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ், ஊராட்சிகளில் குப்பைகளை சேகரிப்பதற்கு 19 கிராம ஊராட்சிகளுக்கு ரூ. 66 லட்சம் மதிப்பீட்டில் 26 மின்கலன் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கீழ்வேளூா் ஒன்றியக் குழுத் தலைவா் வாசுகி நாகராஜன் தலைமை வகித்தாா். வட்டார ஆத்மா குழுத் தலைவா் கோவிந்தராசன் முன்னிலை வகித்தாா். ஒன்றிய குழு துணைத் தலைவா் புருஷோத்தமதாஸ், ஆத்மா குழு உறுப்பினா் பழனியப்பன் ஆகியோா் ஊராட்சித் தலைவா்களிடம் வாகனங்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜகோபால், பாலமுருகன், ஊராட்சித் தலைவா்கள் , ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், ஊராட்சி செயலாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.